பெங்களூர் கோர்ட்டில் 2வது நாள் விசாரணை முடிந்தது-நவ. 8ல் மீண்டும் ஆஜராக ஜெ.வுக்கு உத்தரவு

நேற்றைய விசாரணைக்குப் பின்னர் தனி வி்மானம் மூலம் சசிகலா, இளவரசியுடன் சென்னை திரும்பி விட்ட ஜெயலலிதா, இன்று மீண்டும் தனி விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வந்தனர். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஒரே காரில் வர, முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் தனியாக வந்தார். இவர்கள் மீதும் இந்த நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெங்களூர் வந்தார்.
நேற்று போலவே எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கியது ஜெயலலிதாவின் விமானம். அங்கிருந்து 25 கார்கள் அணிவகுக்க 11 மணிக்கு ஜெயலலிதா நீதிமன்றம் வந்து சேர்ந்தார். அங்கு அவரிடம் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் மிச்சமுள்ள கேள்விகளைக் கேட்டு பதில்களை பதிவு செய்தனர்.
இந்த விசாரணை 3.30 மணிக்கு முடிவடைந்தது. கிட்டத்தட்ட 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இன்றைய விசாரணையின்போதும் அவரிடம் 188 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதையடுத்து நவம்பர் 8ம் தேதி மீண்டும் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். ஜெயலலிதாவிடம் மொத்தம் 1339 கேள்விகளைக் கேட்க நீதிபதி மல்லிகார்ஜூனய்யா திட்டமிட்டுள்ளார். தற்போது கேட்கப்பட்டுள்ள 567 கேள்விகளைத் தவிர்த்து மீதமுள்ள 772 கேள்விகளையும் கேட்க வசதியாகவே நவம்பர் 8ம்தேதியன்று மீண்டும் ஆஜராக அவர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு
ஒருவேளை ஜெயலலிதா நவம்பர் 8ம் தேதி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யாவிடம் கேட்டபோது கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று அதிரடியாக பதிலளித்தார்.
நேற்று அதிமுகவினர் ஏராளமான அளவில் நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டிருந்தனர். ஆனால், இன்று அவ்வளவு கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நேற்றைப் போலேவே இன்றும் ஜெயலலிதா வந்த பாதையிலும் நீதிமன்ற வளாகத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா ஆஜராகவில்லை. நேற்றுதான் அவர் முதல் முறையாக ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடித்த பின்னர் அவரது தோழி சசிகலா மற்றும் சசியின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி கேள்விகளைக் கேட்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications