மதுரையில் வினோதம்: சமமான ஓட்டு வாங்கியதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு!
மதுரை: மதுரை மாநகராட்சியின் 77வது வார்டில் திமுக வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் சமமான வாக்குகள் பெற்றுள்ளதால் குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் யாரேனும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சமமான வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் 77வது வார்டில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றுள்ளனர். 77வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் 3,250 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதையடுத்து குலுக்கல் முறையில் வேட்பாளரைத் தேர்வு செய்யுமாறு அந்த 2 கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே பதவிக்கு போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 1,607 வாக்குகள் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications