39 ஆண்டு வரலாற்றை உடைத்து கரூரில் அதிமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நகராட்சியை அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வாரஜ் சுமார் 28,403 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில் கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ரவி, அதிமுக சார்பில் தமிழ்நாடு செல்வராஜ், காங்கிரஸ் சார்பில் பேங்க்.சுப்ரமணியம், தேமுதிக சார்பில் ஆர்.ராமநாதன், மதிமுக சார்பில் பழனிசாமி, பாமக சார்பில் வழக்கறிஞர் டானியா, பாஜக சார்பில் கோபிநாத் உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தற்போது கரூர் நகராட்சி திமுக வசம் உள்ளதால், இந்த முறையும் கைப்பற்றி ஹாட்ரிக்' அடிக்க திமுக கடும் போட்டி ஏற்படுத்தியது. ஆனால், கடந்த 39 ஆண்டுகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத அதிமுக இந்த முறையாக கரூர் நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என போராடியது.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் அதிமுகவும், 46 வார்டுகளில் திமுகவும், 43 வார்டுகளில் தேமுதிகவும், காங்கிரஸ் கட்சி 29 வார்டுகளிலும், மதிமுக 15 வார்டுகளிலும், பாஜக 5 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும் போட்டியிட்டது.

நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 வார்டுகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 4 வார்டுகளில் போட்டியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மொத்தம் 187 பேரும், சுயேட்சைகள் சார்பில் 92 பேர் உள்பட 48 கவுன்சிலர் பதவிகளுக்கு 279 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், கரூர் நகாரட்சி தலைவர் மற்றும் 48 கவுன்சிலர்கள் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த தமிழ்நாடு செல்வராஜ் வெற்றி பெற்றார்.

இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் ரவியை விட கூடுதலாக மொத்தம் 28,404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 39 ஆண்டுகளில் ஒரு முறை கூட கைப்பற்றாத அதிமுக இந்த முறை வென்றதன் மூலம் முதல் வெற்றி பெற்றுள்ளது. (அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வாராஜ்- 65,166. திமுக வேட்பாளர் ரவி பெற்ற வாக்குகள் 36,762).

அதேபோல கரூர் நகராட்சியில், அதிமுக 34 இடங்களிலும், காங்கிரஸ், தேமுதிக ஆகியவை தலா 4 இடஙக்ளிலும், மதிமுக 3 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்திலும், திமுக ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+