வேலூர் மாநகராட்சியில்6 சுயேச்சை கவுன்சிலர்களை அதிமுகவுக்கு இழுத்தார் அமைச்சர் விஜய்
வேலூர்: வேலூர் மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 6 கவுன்சிலர்களை அதிமுக பக்கம் இழுத்து விட்டனர். இதையடுத்து இவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி விட்டனர். இதனால் வேலூர் மாநகராட்சியில் அதிமுகவின் பலம் 32 ஆக உயர்ந்து விட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட வேலூர் மாநகராட்சிக்குநடந்த தேர்தலில் அதிமுகவின் கார்த்தியாயினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 26 இடங்களையும், திமுக 17 இடங்களையும், மதிமுக, தேமுதிக தலா 2 இடங்களையும், 9 இடங்களை சுயேச்சைகளும் பெற்றனர்.
மெஜாரிட்டி பலத்துக்கு மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேவை. இதனால் அதிமுகவுக்கு மேலும் 4 பேரின் ஆதரவு இருந்தது. இந்தநிலையில் அதிமுகவினர் கடுமையாக முயற்சித்து 6 சுயேச்சைகளை தேற்றி அதிமுக பக்கம் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து அதிமுகவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்ததோடு, துணை மேயர் தேர்வையும் எளிதாக நடத்த வழி கிடைத்து விட்டது.
ஆறு சுயேச்சைகளையும் அதிமுகவில் சேர்க்கும் விழா சத்துவாச்சேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடத்தினர். அதில், அமைச்சர் விஜய் முன்னிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் நித்தியகுமார், சூளை செல்வம், சண்முகம், சுகுமார், உஷாநந்தினி ஆகியோர் இணைந்து கொண்டனர். இன்னொசு சுயேச்சையான லூர்து மேரி என்பவர் மாலையில் வந்து அதிமுகவில் ஐக்கியமாகிக் கொண்டார்.
இப்படியாக வேலூர் மாநகராட்சியில் அதிமுகவுக்கு கூடுதல் பலமும், மெஜாரிட்டியும் கிடைத்து விட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications