ரூ. 80 லட்சத்தை சுருட்டியதாக கேஜ்ரிவால் மீது சுவாமி அக்னிவேஷ் குற்றச்சாட்டு: அன்னா குழு மறுப்பு
டெல்லி: அன்னா ஹஸாரே போராட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நன்கொடை பணத்தில் ரூ. 80 லட்சத்தை அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் தனது அறக்கட்டைளையில் டெபாசிட் செய்ததாக சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதை அன்னா குழு மறு்ததுள்ளது.
அன்னா ஹஸாரே போராட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நன்கொடைப் பணத்தில் ரூ. 80 லட்சம் அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் நட்ததும் பொதுநலனுக்கான ஆய்வுக் கழகம் என்ற அறக்கட்டளை பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையின் இணையதளத்தில் அன்னா ஹஸாரேவின் பெயரும், முக்கிய உறுப்பினர்களின் பெயர்களும் இல்லை. அந்த அறக்கட்டளையில் அன்னாவின் பெயரே இல்லை. அவர்கள் கணக்கு, வழக்குகள் வெளிப்படையாக இல்லை என்று சுவாமி அக்னிவேஷ் குற்றமசாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை அன்னா குழு மறுத்துள்ளது.
இது குறித்து அன்னா குழு உறுப்பினரும், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவருமான சிசோடியா கூறியதாவது,
எங்கள் குழு வெளிப்படையாகத் தான் செயல்படுகிறது. அதன் கணக்கு, வழக்குகள் பொதுநலனுக்கான ஆய்வுக் கழகத்தின் இணையதளத்தில் உள்ளன. கடந்த 6 மாத கணக்குகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை இந்த மாத இறுதியில் இணையதளத்தில் வெளியிடுவோம்.
சுவாமி அக்னிவேஷுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. வயதில் பெரியவர் ஏதாவது சொன்னால் உடனே அதற்காக பதிலடி கொடுக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை. அவர் ஒரு நல்ல மனிதர். அவர் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம்.
கேஜ்ரிவால் நடத்தும் அறக்கட்டளையில் உறுப்பினர்களாகுமாறு அன்னா குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். அன்னா தனது குழுவினர் மீது கோபமாக இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications