சன் டைரக்ட் டிடிஎச் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதிலும் முறைகேடு?: சிபிஐ விசாரணை ஆரம்பம்

தனது சொந்த நிறுவனமான சன் குழுமத்தின் சன் டைரக்ட் டிடிஎச் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதில் தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் சிபிஐ தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
டிடிஎச் (direct-to-home) சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட முறை குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ள சிபிஐ, குறிப்பாக சன் டைரக்ட் சேவை மீது கண் வைத்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு எதன் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தை தொலைத் தொடர்புத்துறையிடம் சிபிஐ கோரியது. இந்த ஒதுக்கீடு தொடர்பான அனைத்து பைல்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறும் சிபிஐ உத்தரவிட்டது.
இதையடுத்து டிஷ் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, பாரதி-மல்டி மீடியா, பாரதி பிசினஸ் சேனல், தூர்தர்ஷன், சன் டைரக்ட், டாடா ஸ்கை ஆகிய நிறுவனங்களுக்கு டிடிஎச் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் தொலைத் தொடர்புத்துறை சமர்பித்தது.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ, சன் டைரக்ட் ஆவணங்களை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு மற்ற பைல்களை தொலைத் தொடர்புத்துறையிடம் திரும்பத் தந்துவிட்டது. இதனால், சன் டைரக்ட் விஷயத்தில் மேலும் சிபிஐ குடையப் போவது நிச்சயமாகியுள்ளது.
ஏற்கனவே ஏர்செல் அதிபர் சிவசங்கரனை மிரட்டி அந்த நிறுவனத்தை மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி அவரது சகோதரர் கலாநிதி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் சேவையில் முதலீடு செய்த சுமார் ரூ. 400 கோடி பணம் தயாநிதிக்குத் தரப்பட்ட லஞ்சமாகவே சிபிஐயால் கருதப்படுகிறது.
இது தவிர தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது சுமார் 323 அதிக சக்தி வாய்ந்த தொலைபேசி ISDN கேபிள்களை தனது வீட்டில் வைத்திருந்து, அதை அண்டர்கிரவுண்ட் கேபிள் மூலம் சன் டிவி அலுவலத்துடன் இணைத்து, அந்த இணைப்புகளை சட்ட விரோதமாக சன் டிவிக்காக பயன்படுத்தியதாகவும் இன்னொரு வழக்கும் சிபிஐ பதிவு செய்துள்ளது.
தொலைத் தொடர்புத்துறை ஜெனரல் மேனஜர் பெயரில் ஒதுக்கப்பட்ட இந்த அதிவேக சக்தி கொண்ட தொலைபேசி இணைப்புகள், சன் டிவிக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் சன் டைரக்ட் டிடிஎச் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ கருதுகிறது. இதனால் அதையும் தோண்ட ஆரம்பித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications