விக்கிலீக்ஸை முடக்க சிலர் சதி-தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது- அசாஞ்ச் அறிவிப்பு

அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர், சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம், அவதூறுப் பிரசாரத்தை தவிடுபொடியாக்குவோம் என்றார் அவர்.
விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications