தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்கும்வரை ஓயமாட்டேன்: கடாபி மகன் சபதம்
திரிபோலி: தன் தந்தையைக் கொனறவர்களை பழிவாங்காமல் விடப்போவதில்லை என்று லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை புரட்சிப் படையினர் அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து கடந்த 20ம் தேதி சுட்டுக் கொன்றனர். அதே நாளில் கடாபியின் 6வது மகனான முத்தாசிமையும் புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த கடாபியின் 2வது மகன் சைப் அல் இஸ்லாம் தற்போது திடீர் என்று டிவி சேனல் ஒன்றில் தோன்றி பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,
நான் லிபியாவில் உயிருடன் தான் இருக்கிறேன். நாம் தொடர்ந்து போராடுவோம். என் தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்காமல் வாங்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.
சைப் அல் இஸ்லாம் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். சரளமாக ஆங்கிலம் பேசுவார். அவருக்கு மேற்கத்திய நாடுகளில் நிறைய நண்பர்கள் உண்டு. கடாபிக்குப் பிறகு சைப் தான் லிபியாவின் அதிபராவார் என்று மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்தன.
ஆனால் லிபியாவில் புரட்சி வெடித்ததும் யாரும் எதிர்பாரா வண்ணம் சைப் அல் இஸ்லாம் போராட்டத்தில் குதித்தார். தன் சொந்த மண்ணில் போராடி உயிர் விடுவதையே பெருமையாக நினைப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து மேற்கத்திய நாடுகள் ஏமாற்றம் அடைந்தன.
சர்வதேச நீதிமன்றம் சைப் அல் இஸ்லாமை குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து அவர் லிபிய எல்லையில் எங்கோ தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தான் தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications