வாக்காளர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவருக்கு வலைவீச்சு
திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்து வெற்றிப் பெற்ற ஊராட்சித் தலைவர் உட்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அடுத்த செம்மாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). திமுகவை சேர்ந்தவர். அவரது மனைவி ஹேமலதா (30). ஹேமலதா சின்னியம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுக தரப்பில் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹேமலதா, கணபதிபாளையம், பல்லக்காடு பகுதிகளை சேர்ந்த வாக்காளர் ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதம் பணம் கொடுத்தார். தேர்தல் முடிவுகள் வெளியான போது, ஹேமலதா வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹேமலதா அளித்த 1,000 ரூபாய் நோட்டை ரங்கன் (63) என்பவர் ரேஷன் கடையி்ல் பொருட்கள் வாங்க கொடுத்தார். அந்த நோட்டை பரிசோதித்த ரேஷன் கடைக்காரர், அது கள்ளநோட்டு என கூறி திரும்ப கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரங்கன், தன்னை போல ஹேமலதாவிடம் பணம் வாங்கிய மற்றவர்களிடம் இதை தெரிவித்தார்.
ஹேமலதாவிடம் பணம் வாங்கிய மற்றவர்களும் அதைப் பரிசோதித்தபோது அவையும் கள்ளநோட்டுகள் என தெரிந்தது. இந்த தகவல் அறிந்த ஹேமலதா, அவரது கணவர் ரவி உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். வாக்களிக்க அளிக்கப்பட்ட 1,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த குன்னத்தூர் போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications