கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே மூட வேண்டும்-வைகோ
சங்கரன்கோவில்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க கூடாது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு தேவைதான். அதற்காக எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டுமே தவிர மக்கள் உயிர்களுக்கு உலை வைக்கும் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கலிங்கப்பட்டியில் உள்ள இல்லத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களை தமிழக அரசு குழப்புகிறது. முதலில் அணு மின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என கூறிய தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை குறித்த அச்சத்தை பொதுமக்களிடம் போக்க வேண்டும் என கூறி வருகிறது.
ஜப்பானில் நடந்த புகுஷிமா விபத்திற்கு பின்னர் அணு உலைகளை அனைத்தையும் மூட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இவ்வளவு பணம் செலவழித்து மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகளை உருவாக்கினாலும் அதற்காக மக்களை பலி கொடுக்க முடியாது என ஜப்பான் கூறியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க கூடாது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு தேவைதான். அதற்காக எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டுமே தவிர மக்கள் உயிர்களுக்கு உலை வைக்கும் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்.
மதிமுக நிராகரிக்க முடியாத அரசியல் கட்சியாக உள்ளது. இதை பற்றி அனைத்து மக்களும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஊழலற்ற அரசியலை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்திற்கு இளைஞர்கள் மாறி வருகின்றனர்.
தமிழக மக்கள் மத்தியில் அரசியல் கருத்துகளை இணையதளம் மூலம் பரிமாறி கொள்ளும் நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன. மதிமுக மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications