இந்திய எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ஜாம்நகர்: இந்திய கடல் எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்தியா கடல் எல்லைக்குள் 6 பாகிஸ்தானியர்கள் அல்-ஹசன் என்ற படகில் நுழைந்தனர். அந்த 6 பேரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் படகை பறிமுதல் செய்தனர்.
அந்த 6 பேரும் ஓஹா பகுதியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பூஜ் என்ற பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு 6 பேரையும் பல மாநில உளவுத்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
இந்த தகவலை இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications