இன்று துணை மேயர், நகராட்சி துணை தலைவர் தேர்தல்: அதிமுகவுக்கு தேமுதிக ரகசிய ஆதரவு!
சென்னை: தமிழகம் முழுவதும் 10 மாநகராட்சிகளின் துணை மேயர்கள், 125 நகராட்சிகளின் துணைத் தலைவர்கள், 529 பேரூராட்சிகளின் துணைத் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், ஒன்றியத் துணைத் தலைவர்கள், 12,524 ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.
மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து துணை மேயர்களையும், நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து துணைத் தலைவர்களையும், ஒன்றிய கவுன்சிலர்கள் வாக்களித்து ஒன்றியத் தலைவர்கள், துணைத் தலைவர்களையும், ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து ஊராட்சித் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
10 மாநகராட்சிகளிலும் அதிமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளதால் அந்தக் கட்சியினரே யார் துணையும் இல்லாமல் துணை மேயர் பதவிகளை கைப்பற்றவுள்ளனர்.
ஆனால், சில நகராட்சிகள் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியிருந்தாலும் பல இடங்களில் துணைத் தலைவர் பதவிகளைப் பிடிக்க அந்தக் கட்சியிடம் போதுமான எண்ணிக்கையில் கவுனசிலர்கள் இல்லை.
இந்த இடங்களில் அதிமுகவுக்கு இணையான இடங்களைப் பிடித்துள்ள திமுக, பிற கட்சியினர், சுயேச்சைகளின் ஆதரவுடன் துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க திமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் இந்த இடங்களில் தேமுதிக, மதிமுக, உள்ளிட்ட பிற கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சைகளிடம் அதிமுக, திமுக இரண்டுமே கடும் பேரத்தில் இறங்கியுள்ளன.
இந் நிலையில் துணைத் தலைவர் பதவிகள் விஷயத்தில் திமுகவுக்கு தேமுதிக கவுன்சிலர்கள் ஆதரவு தர வேண்டாம் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் விஜய்காந்த் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாவட்டச் செயலர்கள் மூலம் இந்த உத்தரவு கவுன்சிலர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.
சென்னை-துணை மேயராக பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு:
இந் நிலையில் சென்னை மாநகராட்சி துணை மேயராக அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 168 இடங்கள் அதிமுக வசம் உள்ளன. திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவை தலா ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை துணை மேயரானார் சின்னதுரை:
இந் நிலையில் இன்று நடந்த தேர்தலில் கோவை மாநகராட்சி துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த சின்னதுரை தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை துணை மேயர் தேர்வு:
நெல்லை மாநகராட்சியின் துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த பி.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை துணை மேயர் தேர்தல்-திமுக புறக்கணிப்பு:
இந் நிலையில் மதுரை துணை மேயர் தேர்தலை திமுக புறக்கணித்தது.
இந்த மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 கவுன்சிலர் பதவிகளில் 99 இடங்களுக்கு தேர்தல் நடந்ததில், அதிமுக 77 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும், 8 இடங்களில் சுயேச்சைகளும், ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட், ஒரு இடத்தில் பாமக ஆகியவை வென்றுள்ளன.
அதிமுக சார்பில் துணை மேயர் பதவிக்கு கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தேர்தலை திமுக புறக்கணித்தது.
அதே போல மற்ற 7 மாநகராட்சிகளிலும் அதிமுகவினரே துணை மேயர் பதவிகளை பிடிக்கவுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications