மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணிபுரியும் தேமுதிக எம்.எல்.ஏ.: மின் இணைப்பு கிடைக்குமா?
கடலூர்: திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகன் அலுவலகத்தில் மின் இணைப்பு திடீர் என்று துண்டிக்கப்பட்டதால் அவர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் கடந்த 2 மாத காலமாக பணி புரிந்து வருகிறார்.
கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தனி அலுவலகக் கட்டிடங்கள் ஒதுக்கியுள்ளது. ஆனால் திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகனுக்கு மட்டும் தனி அலுவலகம் இல்லை. மாறாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனிக் கட்டிடம் ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அழகன் அந்த அலுவலகக் கட்டிடத்தை பயன்படுத்தத் துவங்கியதில் இருந்தே அங்கு தொலைபேசி இணைப்பு இல்லை. இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த 1 வாரத்திலேயே பொதுவான தண்ணீர் வசதி, குடிநீர் இணைப்பு வசதி, மின் இணைப்பு வசதி ஆகியவை திடீர் என்று துண்டிக்கப்பட்டது என்றார் அவர்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
திட்டக்குடி மிகவும் பின்தங்கிய பகுதி. அதனால் மக்கள் மாலை மற்றும் முன் இரவு நேரத்தில் தான் என்னை சந்திக்க வருகின்றனர். அப்போது அலுவலகம் மின்சாரம் இன்றி இருண்டு உள்ளது. அதனால் நான் முன்னிரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணி புரிகிறேன்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுவிட்டேன். இருப்பினும் எந்தவித பலனும் இல்லை. குடிநீர், மின் இணைப்பு ஆகியவை ஏன் துண்டிக்கப்பட்டன, யார் துண்டித்தார்கள், அரசியல் தூண்டுதலா என்று தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு ஏன் இந்த நிலை என்றே தெரியவில்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications