விமானம் புறப்பட தாமதம்: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி
சென்னை: சென்னையி்ல் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதால் 10 மணிநேரம் தாமதாக புறப்பட்டு சென்றது. அதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சிங்கப்பூர் டைகர் ஏர்வேஸ் விமானம் பயணிகளுடம் வந்திறங்கியது. பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு சிங்கப்பூருக்கு திரும்ப தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 161 பேர் செல்ல அனைத்து சோதனைகளையும் முடித்து தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப பணியாளர்கள் விமான கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 4.30 மணி வரை காத்திருந்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விமானம் பழுதுபட்டதால் சுமார் 10 மணி நேரமாக பயணிகள் விமான நிலையத்தில் தவித்தனர்.
இதேபோல் நேற்று காலை 9 மணிக்கு சென்னையி்ல் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ஓட்டுநர் இல்லாமல் புறப்பட தாமதமானது. அந்த விமானத்தில் செல்ல இருந்த 185 பேர் காத்திருந்தனர். விமானி வராததால் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications