Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர்மழை: தண்ணீரில் மிதக்கும் நெற்பயிர்கள்- விவசாயிகள் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. பல இடங்களில் நெற்பயிர்கள் முளை வி்ட்டுள்ளதால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் விவசாயத்தை தான் நம்பி உள்ளன. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கார், பிசானம் ஆகிய இரு பருவ சாகுபடிகள் மேற்கொள்ளப்படும்.

கார் பருவ சாகுபடி ஜூன் 1ம் தேதி தொடங்கும். கடந்த கார் சாகுபடியி்ன் போது பாபநாசம அணை வறண்டு காணப்பட்டது. இதனால் வடக்கு, தெற்கு கொடை அழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகிய 7 கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் நற்றங்கால் அமைத்தனர். இதனால் ஜூலை மாதம் 2வது வாரத்திற்கு பின்னரே நெல் சாகுபடி செய்ய முடிந்தது. ஆனால் பயிர்களை காப்பாற்ற அவர்கள் போராடினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசனமே இல்லாத பாளையங்கால்வாய்க்கு இந்த ஆண்டு தண்ணீர் தந்தபோதிலும் சில நாட்களில் நிறுத்தப்பட்டு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி கண் இமை போல் காத்து பயிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மழை தண்ணீர் இல்லாமல் போராடிய விவசாயிகளுக்கு அறுவடை நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் சோதனையாகிவிட்டது. நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் பயிர்கள் முளை விட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செங்கல் விலை உயர்வு

தொடர்மழையால் குமரி மாவட்டத்தில் செங்கல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் துவரங்காடு, தோவாளை, செண்பகராமன்புதூர், சுங்கன்கடை, வில்லுக்குறி, தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான பரதபளளி, தேமானூர், ஆற்றூர், திக்குறிச்சி, சென்னித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரலாறு காணாத வகையில் செங்கல் விலை உச்சத்தை தொட்டது. 1 செங்கல் ரூ.6.50 வரை விற்றது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாக விலை குறைந்தது. மழைக்கு முன்பாக நாகர்கோவிலில் 1 செங்கல் ரூ.3.90க்கும், மேற்கு மாவட்ட பகுதியில் ரூ.4க்கும் விற்பனையானது. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மேற்கு பகுதியில் 1 செங்கல் விலை ரூ.4.30 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் பகுதியில் ரூ.4.80 ஆக விற்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+