ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும், பிற அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் பெஞ்சமின் நேதன்யா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முதலில் இந்த தாக்குதல் திட்டத்தை எதிர்த்து வந்த வெளியுறவு அமைச்சர் அவிட்கர் லிபர்மேன் இப்போது அதை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வரும் 8ம் தேதி சர்வதேச அணு ஆராய்ச்சி அமைப்பு (International Atomic Energy Agency) தாக்கல் செய்ய உள்ளது. அப்போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகும்.
அதன் அடிப்படையில் ஈரானைத் தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள நிலையில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன. இதனால் ஆயுதத் தயாரிப்பை இப்போதே தடுத்து நிறுத்த, அதன் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் கருதுகிறது.
ஆனால், தனது பெரும்பாலான அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களை ஈரான், நிலத்துக்கடியில் வைத்துள்ளது. மலைகளைக் குடைந்து, மிக ஆழத்தில் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்தில் அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
மருத்துவ ஆராய்ச்சிக்காக யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரான் மீது நாம் தாக்குதல் நடத்துவதை விட அமெரிக்கா தாக்குதல் நடத்துவதே சிறந்தது என பாதுகாப்பு வழிமுறைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர் மோஷே யா லோன் கூறியுள்ளார். அதே போல உள்துறை அமைச்சரான எலி இஸ்ஹாய், இந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தனது முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஈரானிடம் சுமார் 1 லட்சம் ஏவுகணைகளும் ராக்கெட்களும் உள்ள நிலையில், இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக ஈரானை தாக்கிவிட முடியாது என்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications