அரசு கேபிள் டிவி எம்டி ஜெயராமன் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயராமன் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. ஜெயராமன் கடந்த ஜூலை மாத துவக்கத்தில் தான் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராரக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் ஆணையாளராக இருந்த ஜெ. பஜாஜ், ஆணையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறுதொழில் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் மோகன் பியாரே, தொழிலாளர் நலத்துறை செயலராகவும், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் வீரசண்முக மணி,
கருவூலத்துறை ஆணையாளராகவும், தொழில்வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் நிரஞ்சன் மார்டி, சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி செயலாளராகவும், வேளாண் துறை ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனா வேளாண் துறை செயலாளராகவும்,
கருவூலத்துறை ஆணையாளர் மணிவாசன் வேளாண் துறை ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர் ராஜ்குமார், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராகவும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளர் சாந்தினி கபூர், சமூக சீர்திருத்த துறை செயலாளராகவும், சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி செயலாளர் ஸ்ரீதர், பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும்,எவரான் இந்தியா அறக்கட்டளை தலைமை அதிகாரி விக்ரம் கபூர், சுனாமி மறுவாழ்வு பணி திட்ட இயக்குநராகவும்,
திருச்சி ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக உள்ள தயானந்த் கட்டாரியா, நில அளவை மற்றும் தீர்வை ஆணையராகவும்,
வேளாண் துறை செயலாளர் அருள் மொழி,பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராகவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளர் ராஜேந்திர ரத்னு, மீன்வளத்துறை இயக்குநராகவும், அரசு கேபிள் டி.வி. முன்னாள் மேலாண் இயக்குநர் ஜெயராமன், மாநில மனித உரிமை கவுன்சில் செயலாளராகவும், தொழில்துறை ஆணையர் மதிவாணன், சர்க்கரை துறை இயக்குநராகவும்,
தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், மின்வாரியத்துறை மேலாண் இயக்குநராகவும்,மின்வாரியத்துறை மேலாண் இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சிறுதொழில் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநராகவும், டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆனந்த், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மேலாண் இயக்குநராகவும்,
பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த சபீதா, சிப்காட் மேலாண் இயக்குநராகவும், மாநில மனித உரிமை கவுன்சில் செயலாளராக இருந்த விவேகானந்தன், அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குநராகவும்,
சுகாதாரத்துறை துணை செயலாளராக இருந்த வள்ளலார் கனிம வளத்துறை நிர்வாக மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குநர் டேவிதார், தமிழ்நாடு சிமென்ட்ஸ் மேலாண் இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications