அனைத்துப் பொருள்களின் விலையும் கிடுகிடு... உணவுப் பணவீக்கம் 12 சதவீதத்தைத் தாண்டியது!

இந்த வாரம் 12.21 சதவீதமாக உள்ளது உணவுப் பணவீக்கம்.
உணவு தானியங்கள், பால் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறி விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உருப்படியாக எந்த நடவடிக்கயையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்ற பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது, பணவீக்கத்தின் போக்கு.
மீண்டும் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை மட்டுமே பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கருதி வருகின்றன. இதுவரை 13 முறை வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டது மத்திய அரசு. ஆனால் பணவீக்க விகிதம் குறைந்தபாடில்லை.
கடந்த வாரத்தில் 11.43 சதவீதம் என்றிருந்த உணவுப் பணவீக்கம், வட்டி வீத உயர்வுக்குப் பிறகு கட்டுக்குள் வரும் என நம்பினர். ஆனால் மேலும் உயர்வு கண்டுள்ளது உணவுப் பணவீக்கம்.
காய்கறிகள் விலை 29 சதவீதமும், பழங்கள், பருப்புகள், பால் பொருள்கள் விலை 11 சதவீதத்துக்கு மேலும் உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை 20 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன (ஆனால் கடந்த 3 வாரங்களாக விலை எக்கச்சக்கமாக கூடியுள்ளது!).
ரொம்ப கவலையா இருக்கு - பிரணாப்
இந்த உயர்வு பெரும் கவலையளிப்பதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications