திமுகவில் ராஜினாமா சீசன்: கன்னியாகுமரி நகர செயலாளர் ஜஸ்டின் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி நகர திமுக செயலாளர் டாக்டர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின் திடீர் என்று தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கன்னியாகுமரி நகர திமுக செயலாளராக இருந்த டாக்டர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின் திடீர் என்று அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது திடீர் முடிவு குறித்து அவர் கூறியதாவது,

நான் கடந்த 2003ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தேன். அன்றில் இருந்து கட்சிக்காக தீவிரமாக உழைத்து வந்தேன். கன்னியாகுமரி நகர செயலாளர் பதவி வகிக்கும் நான் கட்சித் தலைமைக்கும், குமரி மாவட்ட செயலாளருக்கும், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளருக்கும் உண்மையாக இருக்கிறேன்.

சொந்த பணியால் என்னால் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்யமுடியவில்லை. அதனால் தான் கன்னியாகுமரி நகர திமுக செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் பதவியில் இருந்து விலகினாலும் என்றைக்கும் தலைவருக்கும், மு.க.ஸ்டாலினுக்கும், கட்சிக்கும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.

திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த பரிதி இளம்வழுதி, நெல்லை மாநகர திமுக செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில் ஜஸ்டினும் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+