உலகின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் 11, 19வது இடத்தில் சோனியா, மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh, Sonia Gandhi and Dawood Ibrahim
வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்தவர்கள பட்டியலில் அமெரி்க்க அதிபர் ஒபாமா இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா 11வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்திலும் உள்ளனர்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் என பலத்தரப்பினரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் 2வது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜின்டாவ் 3வது இடத்திலும் உள்ளனர்.

5வது இடத்தில் மைக்ரோ சாப்ட் தலைவர் பில் கேட்ஸ், 6வது இடத்தில் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா, 7வது இடத்தில் போப் 16ம் பெனடிக்ட் ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்தவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 11வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 35வது இடத்திலும், ஸ்டீல் அதிபர் லஷ்மி மிட்டல் 47வது இடத்திலும் உள்ளனர்.

தாவூத் இப்ராகிமுக்கும் இடம்

இந்த பட்டியலில் மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் தாதா ஜோக்கின் ஜூமான் லோரா 55 வது இடத்திலும், மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் 57வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+