எதியூரப்பாவிற்கு ஒரு வழக்கில் ஜாமீன்!..வெளியே வருவாரா?
பெங்களூர்: நில மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்றொரு வழக்கில் இன்று பிற்பகலில் விசாரணை நடக்கிறது.
சட்டவிரோத நில மோசடி மற்றும் சுரங்க ஊழல் தொடர்பான இரு வழக்குகளிலும் ஜாமீன் வழங்க முடியாது என பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதல்வர் அக்டோபர் 15ம் தேதி எதியூரப்பா கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தனது உடல்நிலையை காரணம் கூறி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான விசாரணை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று எதியூரப்பாவிற்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு மனு மீதான விசாரணை பிற்பகல் நடைபெறுகிறது.
ரூ.5 லட்சம் நிபந்தனை ஜாமீன்
ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. பின்டோ 5 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீனில் எதியூரப்பாவை விடுவித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மீது 5 குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் இரண்டு வழக்குகளின் கீழ் அவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று வழக்குகளில் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முதன்முறையாக கர்நாடக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதும், பாரதிய ஜனதா கட்சியின் தென் மாநிலங்களுக்கான முதலாவது மாநில முதல்வராக எதியூரப்பா இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications