கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கவுன்சிலருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாவரத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சுயேட்சை கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை 16வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சீனிவாசன்(35). திமுகவைச் சேர்ந்த சீனிவாசனுக்கு கடந்த தேர்தலில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேரடி வீதியில் உள்ள சீனிவாசன் தனது வீட்டுக்கு அருகே வாடகைக்கு கடை கட்டிவிட்டுள்ளார். அந்த கடையில் அப்துல் ராசக் என்பவர் மனைவி தாகிரா(21) மளிகை கடை நடத்தி வருகிறார். தாகிரா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

தாகிராவிடம் மளிகை சாமான்கள் வாங்கிய சீனிவாசன் ரூ. 200 கடன் வைத்துள்ளார். கடன் பாக்கியைத் தருமாறு நேற்று சீனிவாசனிடம் தாகிரா கேட்டுள்ளார். அதற்கு தனது வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு சீனிவாசன் கூறியதாகத் தெரிகிறது.

தாகிரா பணத்தை வாங்கச் சென்ற போது வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடன் பாக்கியை திரும்பக் கொடுத்த சீனிவாசன் தாகிராவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

சீனிவாசனிடம் இருந்து தப்பியோடிய தாகிரா, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்த சீனிவாசன் தலைமறைவாகிவி்டடார். தாகிரா கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+