For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தில் 34 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து-7 பேர் பலி

Google Oneindia Tamil News

England Road Accident
லண்டன: இங்கிலாந்தில் அடுத்தடுத்து 34 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி நடந்த கோர விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 51 பேர் படுகாயமடைந்தனர்.

சோமர்செட், டான்டன் அருகே எம்5 மோட்டார்வே என்ற நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன. பல வாகனங்களில் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வாகனங்கள் பல அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் நான்கு லாரிகள் ஆகும்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள டான்டன் ரக்பி கிளப் பகுதியில் ஒரு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. அப்போது பட்டாசு வெடித்து அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்பு சாலையில் வந்து விழுந்தது. இதைப் பார்த்து வாகன ஓட்டிகள் தடுமாறி விட்டனர். இதனால்தான் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ள நேரிட்டதாக கூறப்படுகிறது.

English summary
At least seven people were killed and 51 injured in a crash involving 34 vehicles on the M5 motorway on Friday night. The death toll could soar even higher as police said they believe bodies may still be trapped in vehicles which have been left 'burnt and unrecognisable'. The pileup on the northbound carriageway near Taunton, Somerset, involved 34 vehicles, including four lorries. Police said the vehicles were 'immediately alight' following the crash as a 'massive fireball' engulfed the carriageway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X