ஈரோடு அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரியுடன் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி

தமிழகத்தில் சமீப காலத்தில் ஆம்னி பஸ் ஒன்று கோர விபத்தில் சிக்குவது 2வது முறையாகும். கடந்த செப்டம்பர் மாதம்தான் காஞ்சிபுரம் அருகே நடந்த கோர விபத்தில் கேபிஎன் பஸ்சில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை, பெங்களூரிலிருந்து கோவை நோக்கி எஸ்ஆர்எம் என்ற ஆம்னி பஸ் போய்க் கொண்டிருந்தது. சித்தோடு வந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதி விட்டது. மோதிய வேகத்தி்ல டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. பஸ்சும் தீப்பிடித்துக் கொண்டது.
இந்தக் கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே கருகிப் போய் விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்ததனர். அதற்குள் பஸ் முழுமையாக எரிந்து போய் விட்டது.
காயமடைந்தவர்கள் ஈரோடு, கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பஸ் ஏசி பஸ் ஆகும். இதனால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியாமல் போய் விட்டது. அதிகாலை என்பதால் பயணிகள் அனைவருமே தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் என்ன நடந்தது என்பதை சுதாரிக்கும் முன்பு எல்லாம் நடந்து விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications