வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 29% அதிகம் - நாளை முதல் வெயில் அடிக்கலாம்

அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை பத்துநாட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் மேலாக பதம் பார்த்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் மாநிலத்தின் தலைநகரமான சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சென்னையின் புறநகர் பகுதிகளான பீர்க்கங்கரணை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, பம்மல் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
தாம்பரம் – முடிச்சூர் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிச்சூர் சாலையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பலரும் தவறி விழுந்து காயமடைந்தனர்.
விஷ ஜந்துகள் படையெடுப்பு
பல்லாவரம் நகராட்சி கீழ்கட்டளையில் 23 தெருக்களிலும் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அம்பாள் நகர் பகுதியில் மழைநீருடன் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் படையெடுத்து வருவதால் வீட்டுக்குள் வசிக்க கூட மக்கள் அச்சமடைந்தனர். மழைநீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரிநீர் வெளியேற்றப் படுகின்றன. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மூன்றாம் மதகு வழியாக விநாடிக்கு 200 கனஅடிநீர் திறந்துவிடப்படுவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை உயர்வு
தொடர்மழையினால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறையில் சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு சராசரியாக 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் ஞாயிறு மாலைக்குள் அணைநீர்மட்டம் நூறு அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக கடலூரில் 603 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இதுவரை வழக்கமான அளவை விட இந்த ஆண்டு 29 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தாலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications