தமிழக்தில் 16 காவல்துறை கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 16 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. டி.மகேஷ்குமார் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, சென்னை அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. எஸ்.பாஸ்கரன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
- வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் கூடுதல் எஸ்.பி. கே.வி.கபிலன் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. சி.ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- கோவை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. எம்.அண்ணாதுரை பதவி உயர்வு பெற்று, சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு -2 கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. எஸ்.பட்டாபி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பார்.
- புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. எம்.எஸ்.முத்துசாமி சேலம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- சேலம் மாவட்ட எஸ்.பி. ஜெ.பாஸ்கரன் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக பொறுப்பு ஏற்பார்.
- மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டண்ட் ஜெ.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- அரியலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணப்பன், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பி. ஜெயகவுரி, அரியலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் அவினாஷ்குமார் சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட் மயில்வாகனன், சென்னை நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்பார்.
- சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஏ.அருண், வீராபுரம் சுந்தரம்பள்ளி சிறப்பு காவல்படை கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
-* சென்னை திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் பி.விஜயகுமாரி சென்னை கொள்ளை தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை கொள்ளை தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் எஸ்.சாந்தி, சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications