ரூ. 20 லட்சம் தராவிட்டால் கொலை செய்வோம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனுக்கு மிரட்டல்!
சென்னை: குறிப்பிடுகிற ஆளிடம் ரூ. 20 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைக் கொலை செய்வோம் என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக அவைத் தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவரது வீடு பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ளது. இந்த வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அக்கடிதத்தில், நான் குறிப்பிடுகின்ற ஆளிடம் ரூ. 20 லட்சத்தை கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்கா விட்டால் உன்னை கொலை செய்வோம். கொலை எங்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு நிறைய கொலைகளை செய்திருக்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து மதுசூதனன் தண்டையார்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர். கடிதம் பொன்னேரியிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு விசாரணை பார்வை திரும்பியுள்ளது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications