ரயில் முன் பாய்ந்து தெலுங்கானா மாணவர் தற்கொலை- ஹைதராபாத்தில் பதட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் ஹைதராபாத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தவர் நச்சினி நாகேஷ். 30 வயதான இவர் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். இந்தநிலையில் அடிலாபாத்தில் உள்ள தனது சொந்த ஊரான சிந்தகுடாவில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்று கோஷமிட்டபடி அவர் ரயில் முன்பு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனி தெலுங்கானா மாநிலத்தை அமைத்து இப்பகுதி இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுமாறு அவர் கோரியிருந்தார்.
நாகேஷின் பெற்றோரும் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷின் தற்கொலையால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெரும் சோகம் கவ்வியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊர்வலம் செல்ல அவர்கள் முயன்றபோது போலீஸார் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் மீது அவர்கள் கல்வீசித் தாக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications