சிவகங்கை பூங்காவில் சினை மானை கொம்பால் குத்திக் கொன்ற ஆண் மான்
தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் சினை மானை ஆண் மான் ஒன்று கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றது.
தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் 10 ஆண் மான்கள் உள்பட 30 மான்கள் உள்ளன. அதை பார்த்து ரசிக்க ஏராளமானோர் அந்த பூங்காவுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மான்களைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் ஒரு சினை மான் ரத்தக் காயங்களுடன் உணர்வின்றிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து சினை மானை தூக்கிக் கொண்டு கால்நடை மருத்துவர்களிடம் சென்றனர். ஆனால் அந்த மான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
10 வயது மதிக்கத்தக்க அந்த சினை மானை ஒரு ஆண் மான் கடந்த 7ம் தேதி இரவு கொம்பால் குத்திக் கொன்றுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மான்கள் இனப்பெருக்கம் செய்யும். அப்போது மான்கள் கடுமையாக சண்டைபோடும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படி ஏற்பட்ட சண்டையில் இந்த மான் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பூங்காவிற்கு அருகில் உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் அந்த மான் புதைக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications