பிரபாகரன் பிறந்த நாளன்று புதுக் கட்சி தொடங்குகிறார் வேல்முருகன்?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் போக்கையும், கட்சிப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து வேல்முருகன் அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான வேல்முருகனுக்கு ஏற்பட்ட இந்த கதி பாமகவினரிடம் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீக்கப்பட்ட வேல்முருகனை சேர்க்க கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. திமுக சார்பில் நூல் விட்டுப் பார்த்தனர். அதிமுகவும் முயன்றது, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரடியாக வேல்முருகனிடமே பேசினார். தேமுதிகவும் வேல்முருகனை அணுகிப் பார்த்தது. காங்கிரஸ், மதிமுக என பல கட்சிகளும் முயன்றன.
வேல்முருகன் சிறந்த பீல்ட் ஒர்க்கர், இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் என்ற காரணத்தால் வேல்முருகனுக்கு இத்தனை கிராக்கி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனி இயக்கம் காண வேல்முருகன் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது புதுக் கட்சியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம்தேதி தொடங்க வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாகரன் பிறந்த நாள் மாவீரர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் வேல்முருகன் தனது புதிய கட்சியைத் தொடங்குகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரது இயக்கத்துடன் நாம் தமிழர் தலைவர் சீமானும் இணைந்து செயல்படப் போவதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது. இருப்பினும் இதை நாம் தமிழர் அமைப்பு மறுத்துள்ளது. அது தவறான தகவல் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications