திருமணம் நடக்க ஆஞ்சநேயர் கோவிலில் மடிப்பிச்சை வாங்கிய அதிமுக எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டையில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். அங்கு ஐப்பசி மாதம் பவுர்ணமி நாள் அன்று ஆஞ்சநேயருக்கு அன்ன அபிஷேகம் செய்து அந்த சாதத்தை பிரசாதமாக வழங்குவார்கள்.

அந்த பிரசாதத்தை பெண் பக்தர்கள் முந்தானையிலும், ஆண்கள் துண்டிலோ அல்லது சட்டையிலோ மடிப்பிச்சை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அப்படி மடிப்பிச்சை வாங்கி அதை கோவிலில் வைத்தே சாப்பிட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், கடன் தொல்லை இருந்தால் தீர்ந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.

நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அதில் ஆத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் கலந்து கொண்டு மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார். 43 வயதுக்கு மேல் ஆகியும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தான் மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+