பெட்ரோல் விலையைக் குறைக்கவோ, இனி உயர்த்தாமல் இருக்கவோ முடியாது: பிரதமர்
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறைக்கவோ, இனி உயர்த்த மாட்டோம் என்று உறுதியளிக்கவோ, விலையை உயர்த்தும் முன்பு தோழமைக் கட்சிகளின் முதல்வர்களிடம் கலந்தாலோசிக்கவோ முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையைக் குறைக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 8ம் தேதி இரவு டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளோம். தேவைப்பட்டால் இனியும் உயர்த்துவோம். இல்லையென்றால் மத்திய அரசு நிர்வாகம் மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகங்களும் பாதிக்கப்படும் என்று பிரதமர் அவர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தும். அதனால் இது பற்றி எல்லாம் தோழமைக் கட்சி முதல்வர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications