ஆத்ம, ஆன்மீக சிந்தனை மற்றும் தியான பயிற்சியில் கனிமொழி
டெல்லி: 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி, சிறையில் தியானம், ஆத்ம, ஆன்மீக சிந்தனைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால் கனிமொழி மனமுடைந்து காணப்படுகிறார். டெல்லி சிபிஐ கோர்ட் வளாகத்தில் வைத்து தாயார் ராசாத்தியம்மாளை கட்டிப்பிடித்து அழுதார். ராசாத்தியும் அழுதார். சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் ஸ்டாலினிடமும் கண்ணீர் வடித்தார்.
இந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் தியானம், ஆன்மீக சிந்தனை குறித்த பயிற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம்.
அரசு சாரா தொண்டு நிறுவனமான திவ்ய ஜோதி ஜாக்ரிதி சன்ஸ்தன் என்ற அமைப்பு கைதிகளுக்கு ஒழுக்க நெறிகள், தியானம், ஆன்மீக சிந்தனைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதுதொடர்பான புத்தகங்களையும் அது வழங்குகிறது. அதில் தான் கனிமொழியும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருவதாக சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மீக சிந்தனை, கனிமொழிக்கு அமைதியைத் தரட்டும்.!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications