பாகிஸ்தானில் 3 இந்துக்கள் சுட்டுக் கொலை: அமெரிக்கா கண்டனம்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் மூன்று இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிந்து மாகாணத்தின் சிகார்பூர் அருகில் உள்ள சாக் நகரின் மருத்துவமனை ஒன்றில், பணியில் இருந்த டாக்டர் உள்பட 3 இந்துக்கள் அடையாளம் தெரியாத கும்பலால் திங்கட்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வெறித் தாக்குதலில் டாக்டர் அஜித் குமார், அவரது உறவினர்களும் தொழிலதிபர்களுமான நரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு டாக்டரான சாதியா பால் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, மத துவேஷத்துடன் செய்யப்படும் படுகொலை வன்மையாக கண்டிக்கின்றோம். சிறுபான்மையினத்தவருக்கு எதிராக நடைபெறும் எந்த ஒரு வன்முறைக்கும் அமெரிக்க ஆதரவு அளிக்காது. மனித உரிமைக்கு எதிரான இந்த செயலுக்கு சர்வதேச மத சுதந்திரம் சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
காலவரையற்ற வேலை நிறுத்தம்:
இதனிடையே சிந்து மாகாணத்தின் சிகார்பூர், லர்கானா, உமர்கோட், தர்பார்கர் மற்றும் நவாப்ஷா ஆகிய இடங்களில் வசிக்கும் இந்துக்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து தண்டனை அளிக்கும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக இப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications