காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
மதுரை: தன்னை காதலிக்குமாறு ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடுத்த தொல்லையை தாங்க முடியாமல் +2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள சி.ஏ.எஸ். நகரைச் சேர்ந்தவர் உதயசூரியன். அவரது மகள் ஜெயவித்யா (17). தெற்கு வெளிவீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார்.
அவனியாபுரத்தை அடுத்த மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆட்டோ டிரைவர். பள்ளிக்கு தினமும் ஷேர்ஆட்டோவில் சென்று வந்த ஜெயவித்யாவை மணிகண்டன் (25) பின் தொடர்ந்து சென்றுள்ளார். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மணிகண்டனின் தொல்லையை பொறுக்க முடியாமல் ஜெயவித்யா இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயவித்யாவுக்கு உறவு முறையி்ல் ஒருவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆறுதலடைந்த ஜெயவித்யா தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்ல ஜெயவித்யா வழக்கம் போல சி.ஏ.எஸ். நகரில் வந்து ஷேர்ஆட்டோவுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னை திருமணம் செய்து கொள் என்று கூறி மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜெயவித்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயவித்யாவை தற்கொலைக்கு தூண்டிய மணிகண்டன் மீது அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications