இன்று, நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் 11-11-11!

இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய தேதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த தேதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் தேதியை உலகம்முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர்.
இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
ஜோதிடர்கள் சிறப்பு
பதினொன்றாம் எண்ணிற்கு பல சிறப்புகள் உள்ளன. எண்ணியல் பார்வையில் ஒரே இலக்கமாக அதுவும் ஆரம்ப இலக்கமான ஒன்றாக அமைந்திருப்பது சிறப்பு தன்மையாகும். ஒன்று என்பது முதன்மையானது. எனவே இந்த ஆண்டு நவம்பர் 11 ஐ மிகவும் பிரசித்தி பெற்ற நாளாக சோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் வெள்ளிக்கிழமை இந்த நாள் அமைந்திருப்பது அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளனர் சோதிடர்கள்.
சனியனுக்கு உகந்த எண்!
அதேசமயம், இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் நல்லதல்ல என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். 11,11, 11 என்று அனைத்திலும் 11 வந்தாலும் கூட இதன் மொத்தக் கூட்டுத்தொகை (11-11-2011) 8 என்று வருகிறது. இது சனி பகவானுக்கு உரிய எண் என்பதால் சற்றுக் கவலைக்குரியதே என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
எனவே 1 மணிக்குள் பிறக்கும் குழந்தைகள் நல்ல வளமுடனும், நலமுடனும் இருக்கும் என்றும், அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும் என்றும் கூறி சில ஜோதிடர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர்.
ஐஸ்வர்யாவிற்கு குழந்தை
முன்னாள் உலக அழகியும் பிரபலமான திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யாராய் க்கு இந்த நாளில்தான் பிரசவம் நடைபெறும் என்று பலரும் பந்தயம் கட்டியுள்ளனர். அதுவும் இரட்டைக்குழந்தை என்பதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினார் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இது மட்டுமல்லாது உலகளவில் பல துறை சார்ந்தவர்களையும் கவர்ந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த ஓர் தினமாக மாறியுள்ளது நவம்பர் 11. எது எப்படியோ 11.11.11 என்பது பிரபலங்களுக்கு பிரபலம் மற்றும் பிற பலம் சேர்க்கும் நாளாக மாறியுள்ளது.
எந்த நாளாக இருந்தால் என்ன, எந்த எண்ணாக இருந்தால் என்ன, நல்ல மனமும், நல்ல எண்ணமும் இருந்தால் எல்லா நாளும் இனிய நாளே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications