தமிழ்நாட்டில் குறைந்தது மழை- மாலை முதல் காலை வரை வதைக்கும் பனி
சென்னை : கடந்த வாரம் வரை வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பனி பெய்ய ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் பனியால் தேயிலைகள் கருகியுள்ளன.
தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை நவம்பர் முதல்வாரம் வரை வெளுத்து வாங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு அணைகள், நீர்த்த்தேக்கங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தொடக்கத்திலேயே 70 சதவிகித அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக மழை ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. மாலை நேரங்களிலேயே குளிர் தொடங்கி இரவு முழுவதும் பனியாக கொட்டுகிறது. இந்த சீதோஸ்ண மாற்றத்தினால் ஏராளமானேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பனிக்காலம் தொடங்கியுள்ளதால் கம்பளி, பனிக்குல்லா போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
நீலகிரியில் கருகும் தேயிலை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி வரை பருவமழை பெய்தது. மழை நின்ற மறுநாள் முதல் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் குன்னூர் உள்ளிட்ட இடங்களில் தேயிலைச்செடிகள் கருகிவருகின்றன. இதனால் அதிக நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பனியின் தாக்கம் மேலும் தீவிரமடையும் பட்சத்தில் மகசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பனிக்கான காரணம் என்ன?
மார்கழிமாதம்தான் பனிக்காலம் தொடங்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதத்திலேயே பனி பெய்து வருவதால் மழை இனி இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், வானத்தில் மேகக் கூட்டம் இல்லாததால் வானம் தெளிவாக உள்ளது. எனவே வானம் தெளிவாக இருந்தாலே குளிர் அதிகமாக இருக்கும் என்றார்.
வளிமண்டலத்தில் உள்ள ஈரம் காரணமாகவே அதிக தூரம் பார்க்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் ரமணன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications