உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம்: சோ.அய்யர்
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 1995, தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 2006ன் படி, 2011ம் ஆண்டு
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தேர்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் உரிய படிவத்தில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறினால் முறையான விசாரணைக்குப் பின்பு 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications