தாய்மாமன் குடும்பத்தை ராஜ குடும்பம் புறக்கணிப்பதாக செய்தி- கவலையில் ராணி எலிசபெத்

இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் தாயாருடன் பிறந்த சகோதரர் ஜான்போவ்ஸ் லியான். இவருக்கு நெரிசா, காத்ரீன் போவ்ஸ் லியான் என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் நெரிசா கடந்த 1986-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் இறந்து விட்டார். காத்ரீன் போவ்ஸ்சிற்கு தற்போது 85 வயதாகிறது. மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் ஓக்லாந்து அறக்கட்டளை நடத்தும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் காத்ரீன்.
சானல் 4 ஆவணப்படம்
தனது தாய்மாமன் குடும்பத்தினரை கடந்த 50 ஆண்டுகளாக எலிசபெத் அரசியும் அவரது அரச குடும்பத்தினரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை லண்டனின் “சானல்4" தொலைக்காட்சி கடந்த 11ம் தேதி ஒளிபரப்பியது. அதில், நெரிசா சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க ராணிஎலிசபெத் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. இறுதி சடங்கில் அவரோ மற்றும் அரச குடும்பத்தினரோ பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று தான் காத்ரீனும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியானது. இங்கிலாந்து முழுவதும் இந்த ஆவணப்படம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அரசி மனவேதனை
இந்த தகவல் முற்றிலும் சுத்தமான வடிகட்டிய பொய் என்று அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிகிச்சை பெற்று வந்த மாமன் மகள்களை பார்க்க எலிசபெத் அரசி மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள்தான் அரசியை கண்டு கொள்ளவில்லை. பேச மறுத்து விட்டனர். எனவே அவர் திரும்பி வந்து விட்டார் என அரசிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தவறாக சித்தரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒளிபரப்பட்டதை அறிந்து
எலிசபெத் அரசி மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications