'வால் ஸ்ட்ரீட்' ஆக்ரமிப்பு இயக்கத்தினரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய நியூயார்க் போலீசார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வால்ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினரை அவர்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு நியூயார்க் நகர போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். சக்கோட்டி பூங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் அங்குள்ள போல்லி சதுக்கத்தில் மீண்டும் ஒன்று கூடி உள்ளனர் போராட்டக்காரர்கள்.

தொழிற்சாலை அதிபர்கள் பேராசைக்காரர்களாக உள்ளனர், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதார நெருக்கடி போன்ற பல காரணங்களை கூறி 'வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

நியூயார்க் நகரில்உள்ள சக்கோட்டி பூங்காவில் சுதந்திர சதுக்கம் அருகே முகாம் அமைத்து தங்கி அமைதியான முறையில் கிளர்ச்சியாளர்கள் போராடி வந்தனர். போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் போராட்டக்காரர்களை வெளியேற்ற நியூயார்க் நகர போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணிந்த போலீசார், தடுப்புகளை கையில் பிடித்துக்கொண்டு, போராட்டாக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது பெரும் கூச்சல், குழப்பம் உருவானது. இதனையடுத்து பூங்காவில் இருந்து வெளியேறியவர்கள் தற்போது போல்லி சதுக்கத்தில் மீண்டும் ஒன்று கூடி உள்ளனர். அமைதியான முறையில் போராடி வரும் தங்கள் மீது போலீசை ஏவி விடுவதாக போராட்டக்காரார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்பு இயக்கம் வலுவடைந்து வருவதை பொறுத்துக்கொள்ளாத அரசு போலீசாரை வைத்து தங்களை அப்புறப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வலுவடையும் போராட்டம்

வாஷிங்டன் ஆக்ரமிப்பு இயக்கம், லாஸ் ஏஞ்சலீஸ் ஆக்ரமிப்பு இயக்கம் என்ற நகர்சார் பெயர்களில் கிளைகளாகப் பரவும் ' வால்ஸ்ட்ரீட்" ஆக்ரமிப்பு' (Occupy Wall Street) இயக்கம் மிக அமைதியான முறையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கிய இந்த கிளர்ச்சியானது ஐரோப்பாவின் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் பரவியுள்ளது. அங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+