உ.பி மக்கள் பிச்சை எடுக்கும் காரணத்தை தனது மனசாட்சியிம் கேட்கட்டும் ராகுல்-தாக்கரே

Subscribe to Oneindia Tamil

மும்பை: உத்தரப்பிரதேச மக்கள் பிச்சை எடுப்பதற்கான காரணம் குறித்து ராகுல்காந்தி தனது மனசாட்சியிடம் கேட்கவேண்டும் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ஒரு ஊமை என்றும் அவர் சாடியுள்ளார்.

உத்தரபிரதேச மக்கள் வேலைக்காக மகராஷ்டிர மாநிலத்திடம் பிச்சை எடுக்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பால் தாக்கரே தனது தனது சாம்னா பத்திரிகையில் ராகுல்காந்தியை விமர்ச்சித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :

உத்தரப்பிரதேசத்தை காங்கிரஸ் கட்சிதான் நீண்டகாலமாக ஆண்டு வந்தது. அப்படியிருக்க அந்த மாநில மக்களின் துயர நிலைக்கு ராகுல் வேறு யாரையும் குற்றம்சாட்ட முடியாது என தாக்கரே தெரிவித்தார்.

மனசாட்சியை கேட்க வேண்டும்

உத்தரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு காங்கிரஸ் பிரதமர்களும், முதல்வர்களும் வந்துள்ள நிலையில் அந்த மாநில மக்களின் நிலைமைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி உள்ளாய்வு செய்ய வேண்டும் என்று தாக்கரே குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள்

ராகுல்காந்தியின் வாதப்படியே பார்த்தாலும், தற்போது மகாராஷ்டிராவில் உள்ள உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும், சமாஜவாதிக் கட்சியினரும் ராகுல் காந்தியின் பெயரால் பிச்சை எடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+