கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி கொலை:கள்ளக் காதலனுடன், மனைவி கைது
விகேபுரம்: அம்பை அருகே கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் விசுவநாதன். அவரது மனைவி ஆதிலெட்சுமி. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விசுவநாதன் மார்த்தாண்டத்தில் எல்ஐசி உயர் நிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். தினமும் அவர் நெல்லை வரை பைக்கில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் செல்வது வழக்கம்.
கடந்த 10ம் தேதி அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அம்பை கல்சுண்டு காலனி அருகே பைக் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த விசுவநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விகேபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விசுவநாதன் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் போலீசாரிடம் மரண வாக்குமுலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அம்பை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விசுவநாதன் மனைவி ஆதிலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆதிலட்சுமி நேற்று மாலை விஏஓ முன்பு சரணடைந்தார்.
அப்போது அவர் அளித்துள்ள வாக்குமுலத்தில் கூறியிருப்பதாவது,
எனக்கும், அம்பை எல்ஐசி காலனியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் குமார் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரான குமார் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றபோது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்து எனது கணவர் கண்டித்தார். இது பற்றி குமாரிடம் தெரிவித்தேன்.
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்தோம். கடந்த 1 மாதத்துக்கு முன்பாக ரூ.1 லட்சம் குமாரிடம் கொடுத்தேன். அந்த பணத்தில் தான் குமார் கார் வாங்கினார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்ற விசுவநாதனை கார் ஏற்றிக் கொன்றோம். இதற்கு குமாரின் நண்பர்கள் இருவரும் உதவினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications