சிஏஜி, பிஏசிக்கு பிரணாப் ஆதரவு.. பிரணாபுக்கு ஜோஷி ஆதரவு!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்தியத் தலைமைக் கணக்கு அதிகாரி மற்றும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மத்திய தலைமைக் கணக்குத்துறையின சிஏஜி அமைப்பின் 150வது ஆண்டுவிழா டெல்லியில் நடந்தது. அதில் பிரணாப் முகர்ஜி, முரளி மனோகர் ஜோஷி, தற்போதைய சிஏஜி வினோத் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முரளி மனோகர் ஜோஷி பேசுகையில், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், பல ஊழல் வழக்குகள் இந்த அமைப்புகள் மூலமாகவே அம்பலமாகியிருக்கின்றன.
சமீபத்தில் வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில், சிஏஜி, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவற்றை பிரணாப் முகர்ஜி புகழ்ந்து பேசியது பாராட்டுக்குரியது. இது போன்ற அமைப்புகள் காரணமாகவே, இந்திய அரசு நிர்வாகம் வலுவாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாக முகர்ஜி கூறினார்.
இதுபோன்ற கருத்துகள் இந்த அமைப்புகள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும். பிரணாப் முகர்ஜி தனது ஆதரவை தொடர்ந்து பிஏசி, சிஏஜி போன்ற அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்.
சமீபத்தில் சிஏஜியை ஊடகங்களில் ஒரு பிரிவினரும், அரசியல்வாதிகளும் கடுமையாக விமர்சித்தனர். இது தவறானது. சிஏஜியையும் அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் மதிக்க வேண்டிய நமது நாடாளுமன்ற உறுப்பினர்களே, சிஏஜியின் நியாயமான வெளிப்படையான கருத்துகளை ஏற்கத் தயங்குகின்றனர். மத்திய அமைச்சர்களே தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். இது துரதிஷ்டவசமானது என்றார்.
இக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசுகையில், சிஏஜி அமைப்புக்கு மேலும் அதிகாரங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிஏஜி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications