பிளாக்கில் நிர்வாணப் படம் வெளியிட்ட எகிப்து மாணவி: மக்கள் கொதிப்பு

எகிப்தைச் சேர்ந்தவர் ஆலியா மக்தா எல்மஹ்தி (20). பல்கலைக்கழக மாணவி. எகிப்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான லிபரல்ஸ் மற்றும் கன்சர்வேட்டிவ்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எகிப்தில் முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிந்து தான் வெளியே செல்வார்கள். அப்படி இருக்கையில் ஆலியா நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளது முஸ்லிம் மதக் கொள்கையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது. ஆலியாவின் இந்த செயல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எகிப்தில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது கூட தவறு.
இந்த புகைப்படங்கள் வன்முறை, இனவெறி, பாலியல் வன்முறைகள், பாசாங்கு நிறைந்த சதமுதாயத்திற்கு எதிரான குரல் என்று கூறியுள்ளார் ஆலியா. இந்த வாரத் துவக்கத்தில் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில் இருந்து இது வரை 1.5 மில்லியன் தடவை அந்த புகைப்படங்களை இணையதள பயனீட்டாளர்கள் பார்த்துள்ளனர்.
எகிப்தில் அடுத்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதில் இஸ்லாமியர்களுக்கும், லிபரல்ஸுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்த நிர்வாணப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. லிபரல்ஸ் ஆட்சிக்கு வந்தால் எகிப்தை சீரழித்துவிடுவார்கள் என்று சலாபி என்னும் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆலியா, முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக்கிற்கு எதிராக புரட்சி நடத்திய லிபரல் அமைப்பான ஏப்ரல் 6 இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று செய்தி வெளியானது. ஆனால் இதை அந்த இயக்கம் மறுத்துள்ளது. நாங்கள் பண்பாட்டை மதிப்பவர்கள். அப்படி இருக்கையில் இப்படி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை பிளாக்கில் வெளியிட்டுள்ள பெண் எப்படி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications