சபாநாயகர் மீரா குமார் குடும்ப வாடகை பாக்கி ரூ. 1.98 கோடி- 'பில்' அனுப்பிய நகர்ப்புற அமைச்சகம்!
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமார் குடும்பத்தினர் கடந்த 1986ம் ஆண்டு முதல் வசித்து வரும் பங்களாவுக்கான வாடகை பாக்கியாக 1 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 723 ரூபாய் தர வேண்டும் என்று மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின், எஸ்டேட்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கு பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
சுபாஷ் சந்திர அகர்வால் என்ற ஆர்டிஐ சேவகர் கோரிய கேள்விக்கு இந்தப் பதிலை அனுப்பியுள்ளது எஸ்டேட்ஸ் பிரிவு.
இதுதொடர்பாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாபு ஜெகஜீவன் ராம் மறைவுக்குப் பின்னர் அவரது மகளான மீரா குமார் மற்றும் ஜெகஜீவன் ராமின் குடும்பத்தினர், கடந்த 1986ம் ஆண்டு கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள 6ம் எண் பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்தனர். அன்று முதல் அவர்கள் இதுவரை வாடகை பாக்கியாக ரூ. 1,98,22,723 வைத்துள்ளனர். இதுதொடர்பாக பில் தயாரிக்கப்பட்டு மீரா குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் பூட்டாசிங், டிராய் தலைவர் ஜே.எஸ்.வர்மா ஆகியோர் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு, அவர்கள் வாடகை பாக்கி எதையும் வைத்திருக்கவில்லை என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்டிஐ பதில் குறித்து மீரா குமார் அலுவலகத்தில் விளக்கம் கேட்டபோது, மறைந்த ஜெகஜீவன் ராம் குடும்பத்தினர் யாரும் அந்த பங்களாவில் தற்போது வசிக்கவில்லை. 2002ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியே அங்கிருந்து அனைவரும் காலி செய்து விட்டனர். இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறை, எஸ்டேட்ஸ் பிரிவு இயக்குநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்களாவை காலி செய்தவுடனேயே அங்கு குடிநீர், மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications