ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்பி உட்பட 17 பேர் மீது பாலியல் வழக்கு
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், பாஜக முன்னாள் எம்பி, 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் உடன் வேலை தேடி ராஜஸ்தானுக்கு வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணை முன்னாள் ராஜஸ்தான் அமைச்சர் ஜோகிஸ்வர்கார்க், பாஜக முன்னாள் எம்.பி. நிகல்சந்த்மொவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமில் ராவ், மஹாவீர் உட்பட 17 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த 17 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வைஷாலி நகர போலீஸ் அதிகாரி ராய்சிங் பெனிவால் கூறியதாவது,
புகார் தெரிவிக்கப்பட்ட 17 பேர் மீது கற்பழிப்பு, கொடுமைப்படுத்தி துன்புறுத்துதல், 3 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான எண்ணத்துடன் அடைத்து வைத்தல், மிரட்டல், சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே பன்வாரி தேவி என்ற நர்ஸ் மாயமான விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் ராஜஸ்தான் அரசுக்கு இந்த வழக்கு புதிய தலைவலியாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications