தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி-கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த 13-6-2011 அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளமிங்கோ லைனர் என்ற நிறுவனம் கப்பலை இயக்கி வருகிறது. தொடக்கத்தில் இந்த கப்பலில் அதிக பயணிகள் சென்று வந்தனர். நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தூத்துக்குடியில் இருந்து கொழும்பு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி வரவே இல்லை. இது குறித்து பிளமிங்கோ லைனர் கப்பல் நிறுவன அதிகாரிகளிடம கேட்டபோது அவர்கள் கூறியதாவது,
டிக்கெட் முன்பதிவுக்காக கம்யூட்டரில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேரில் பழுது ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் 2 சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து கப்பல் புறப்பட்டு வரும். அதன் பிறகு வழக்கம்போல் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றனர்.
பயணிகள் மத்தியில் ஆர்வக் குறைவு, எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் இல்லாததன் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications