For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க!

Google Oneindia Tamil News

2011ம் ஆண்டின் மிக மோசமான 25 இமெயில் பாஸ்வேர்ட்களை ஸ்பிளாஷ் டேட்டா என்ற நிறுவனம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட பாஸ்வேர்ட்களை யாராவது வைத்திருந்தால் அவர்களின் இமெயில் மற்றும் டேட்டாக்கள் பாதுகாப்பற்றது என்று அது எச்சரித்துள்ளது.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான ஸ்பிளாஷ் டேட்டா இதுகுறித்துக் கூறுகையில், இமெயில், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்களுக்குரிய பாஸ்வேர்ட்கள் குறித்து பலரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் எளிதில் ஊகிக்கக் கூடிய, படு சுலபமான பாஸ்வேர்ட்களை யாராவது வைத்திருந்தால் அவர்கள் ஹேக்கர்களிடம் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 25 பாஸ்வேர்ட்கள் அனைவராலும் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையிலானவையாக அமைந்துள்ளன. இவற்றை வைத்திருப்போர் உடனடியாக சிக்கலான பாஸ்வேர்ட்களுக்கு மாறிக் கொள்வது நல்லது என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு ஹேக்கர்களிடமிருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த பாஸ்வேர்ட் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

இந்த பாஸ்வேர்ட் பட்டியலைப் பாருங்களேன்...

password
123456
12345678
qwerty
abc123
monkey
1234567
letmein
trustno1
dragon
baseball
111111
iloveyou
master
sunshine
ashley
bailey
passw0rd
shadow
123123
654321
superman
qazwsx
michael
football

இந்த லிஸ்ட்ல உங்க பாஸ்வேர்ட் இருக்கான்னு பார்த்து உடனே மாத்திருங்கப்பா...!

English summary
Your password can be hackers favourite too! Wondering how? Well, by being among the worst passwords. Easy to guess passwords make your computer, smartphone, or especially online bank accounts highly vulnerable to hackers. The computer security firm Splash Data has released its list of the worst passwords for 2011. SplashData created the rankings based on millions of stolen passwords posted online by hackers. Here is the complete list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X