சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வாபஸ் பெறாவிட்டால்..: தா.பா. மத்திய அரசுக்கு எச்சரிக்கை
திருவாரூர் : சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு வாபஸ் பெறாவிடில் வணிகர்களை ஒருங்கிணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநிலக் குழுக் கூட்டம் திருவாரூரில் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் பால், பஸ் கட்டண உயர்வு பொது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. விலை உயர்வு மூலம் மாநில அரசின் வருவாயை அதிகரிக்க முதல்வர் எடுத்துள்ள முடிவு துணிச்சலான முடிவு அல்ல.
தேவையான வருவாயை சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கையின் வரவு, செலவு திட்டத்தின் மூலமே சமாளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி உடனே வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு வாபஸ் பெறாவிடில் வணிகர்களை ஒருங்கிணைத்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டத்தில் ஈடுபடும்," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications