பாகிஸ்தானில் எல்லை அடைப்பு – நேட்டோ படைகள் தவிப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் செல்லும் எல்லையை பாகிஸ்தான் அடைத்துள்ளது. தங்களின் விமான தளத்தில் இருந்த 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அமெரிக்கா –பாகிஸ்தான் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான“நேட்டோ" ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 28 வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை அடைக்கப்பட்டது
இந்த விவகாரம் குறித்து பிரதமர் யூசுப் ரசாகிலானி தலைமையில் கூடிய அமைச்சரவை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க தலைமையிலான “நேட்டோ" படைகளுக்கு உணவு கொண்டு செல்லும் பாகிஸ்தானின் தோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் படி உடனடியாக 2 எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனால் நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி சென்ற 40 லாரிகள் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
15 நாட்களில் வெளியேற உத்தரவு
பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி அழித்து விடுகிறது.
அதற்காக ஷாம்சி விமான படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தற்போது நடந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பிரதமர் கிலானியை நேரில் வந்து சந்திக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கா இரங்கல்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், ராணுவ மந்திரி லியோன் பெனெட்டா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications